கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஒற்றைவரியில் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP